பிளஸ்–2 மதிப்பெண் பட்டியல் எப்போது ? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

by Editor / 10-07-2021 04:50:54pm
பிளஸ்–2 மதிப்பெண் பட்டியல் எப்போது ? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

 

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் இம்மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூரில் நடைபெற்ற கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளையும், கட்டமைப்புகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. வரும் பட்ஜெட்டில் கல்விக்கென புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளது.
கொரானா வைரஸ் தொற்றின் காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதால், தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஏற்கனவே அரசும் நீதிமன்றமும் தெளிவாக தெரிவித்துள்ளது. அதையும் மீறி தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக ஆதாரப்பூர்வமான புகார்கள் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த மாத இறுதிக்குள் பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறையுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

 

Tags :

Share via