தமிழக அரசு கொண்டுவந்திருக்கும் தொழிற்சாலைகள் சட்டத்தை  கைவிட வலியுறுத்தி தெருமுனைக்கூட்டம் 

by Editor / 21-04-2023 10:02:57pm
தமிழக அரசு கொண்டுவந்திருக்கும் தொழிற்சாலைகள் சட்டத்தை  கைவிட வலியுறுத்தி தெருமுனைக்கூட்டம் 

நெல்லை வண்ணராப்பேட்டையில்  108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஏப்ரல் மாத ஆலோசனை மற்றும் தீர்மானம் கூட்டம்.திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி  மண்டல செயலாளர். முஹைதீன் தலைமையில் நடைபெற்றது. ராஜன்,ஜெயக்குமார்,மகாமுனி,ஆகியோர் முன்னிலையா வகித்தனர்.மாநில பொது செயலாளர்.இராஜேந்திரன் சிறப்புரையாற்றினார்.தென்காசி மாவட்ட துணை தலைவர் செல்வகுமார் உறுதிமொழி வாசித்தார்.திருநெல்வேலி  மாவட்ட பொருளாளர் சுந்தர் நடுநிலை வகித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
1. தமிழக அரசு கொண்டுவந்துருக்கும் தொழிற்சாலைகள் சட்டம் 1948 பிரிவு 65  A திருத்தத்திற்கு எதிரான நடவடிக்கை.

2. சட்ட விரோத ஒன்றையே  சட்ட திட்டங்களாக கொண்டிருக்கும் EMRI GREEN HEALTH SERVICE (GVK-EMRI) நிர்வாகத்தின் சட்ட விரோத செயலுக்கு எதிரான நடவடிக்கை.என்றும்,உலகில் எந்த அரசும் தன் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக செய்ய துணியாத கொடுமையினை செய்திடும் விதத்தில் தமிழக அரசு கொண்டுவந்திருக்கும் தொழிற்சாலைகள் சட்டம் 1948 பிரிவு 65A வை கைவிடவலியுறுத்தி கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் தாலுகா தோறும் தெருமுனை கூட்டங்கள் நடத்துவது என்றும் மாநில அளவிலும் மாவட்ட மண்டல அளவிலும் போராட்டங்கள் முன்னெடுப்போம் என்றும் விவாதித்தனர்.

2. சட்ட விரோதம் ஒன்றையே சட்ட திட்டங்களாக கொண்டு செயல்படும் GVK EMRI நிர்வாகத்தின் சட்ட விரோத பணி நீக்கத்தை கை விட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டங்களையும் முன்னெடுப்பதென்றும் தொழிற்சாலைகள் சட்டம் 1947 பிரிவு 2 k இன் கீழ் தொழிர்த்தாவா எழுப்புவதென்றும் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகளால் விவாதிக்கப் பட்டது.

தமிழக அரசு கொண்டுவந்திருக்கும் தொழிற்சாலைகள் சட்டத்தை  கைவிட வலியுறுத்தி தெருமுனைக்கூட்டம் 
 

Tags :

Share via