நான் யாரையும் முதுகில் குத்த மாட்டேன் - டி.கே.சிவக்குமார்

by Staff / 16-05-2023 12:54:56pm
நான் யாரையும் முதுகில் குத்த மாட்டேன் - டி.கே.சிவக்குமார்

நான் யாரையும் முதுகில் குத்த மாட்டேன் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் பதவி குறித்த விவாதம் சூடுபிடித்துள்ள நிலையில், இது தொடர்பாக கட்சியில் எந்த குழப்பமும் ஏற்படாது என டி.கே. சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார். 'கட்சியின் முடிவு எதுவாக இருந்தாலும் முதுகில் குத்தவோ, மிரட்டவோ முயற்சிக்க மாட்டேன். கட்சி விரும்பினால் என்னால் பொறுப்பு வகிக்க முடியும். 135 உறுப்பினர்களைக் கொண்ட ஒற்றுமையான அணியாக செயல்படுவோம். நான் யாரையும் பிரிக்க விரும்பவில்லை' எனக்கூறினார்.

 

Tags :

Share via