சென்னை மெட்ரோவில் 2.81 லட்சம் பேர் பயணம்

by Staff / 26-06-2023 05:55:41pm
சென்னை மெட்ரோவில் 2.81 லட்சம் பேர் பயணம் சென்னை மெட்ரோ ரயில்களில் ஜூன் 23-ம் தேதி ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2,81,503 பயணிகள் பயணம் செய்துள்ளனர் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஜூன் 23 ஆம் தேதி 23,745 பயணிகளும், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 14,935 பயணிகளும், கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் 14,938 பயணிகளும் பயணம் செய்துள்ளனர். மே மாதத்தில் அதிகபட்சமாக 24.05.2023 அன்று 2,64,974 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Tags :

Share via