விண்ணில் பாய்ந்த சந்திரயான் 3-ராகுல்காந்தி வாழ்த்து.

by Editor / 14-07-2023 11:54:32pm
விண்ணில் பாய்ந்த சந்திரயான் 3-ராகுல்காந்தி வாழ்த்து.

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் எல்விஎம்3 எம் 4 ராக்கெட் மூலம் பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

 இதன் சிறப்பம்சம் பற்றியும், சந்திரயான் 1, சந்திரயான் 2 விண்கலங்கள் பற்றியும் தெரிந்து கொள்வோம் வாங்க..

சந்திரயான் 1:

 அமெரிக்க, ரஷ்யா போன்ற நாடுகள் நிலவு ஆராய்ச்சியில் முன்னணியில் இருந்த நிலையில், முதல்முறையாக நிலவை ஆராய இந்தியா சார்பில் அனுப்பப்பட்டது தான் சந்திரயான் 1 விண்கலம்.

 2008ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் சந்திரயான் 1 விண்கலம் விண்வெளிக்குச் செலுத்தப்பட்டது.

 இதில் இருந்த 11 ஆய்வு உபகரணங்களில், 5 கருவிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டதாகும்.
 சந்திரயான் 3…

இந்த சாதனையை நிகழ்த்திய இஸ்ரோ குழுவுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அந்தவாழ்த்து செய்தியில் அவர் தெரிவித்துள்ளதாவது.

இஸ்ரோ குழுவுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று கோடிக்கணக்கான மக்கள், பெருமையுடன் வானத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம். சந்திரயான் 3, பல ஆண்டுகால உழைப்பின் பலன்; இது வெற்றி அடைந்தால், சந்திரனின் மேற்பரப்பில் விண்கலத்தை தரையிறக்கும் 4வது நாடாக நம்மை மாற்றும்; இது உண்மையிலேயே மகத்தான சாதனை எனவும் கூறியுள்ளார்.

 

Tags :

Share via