தமிழகத்தில் 25 வட்டங்கள் வறட்சி பாதித்த பகுதிகள்: தமிழக அரசு 

by Editor / 22-07-2023 12:43:58am
தமிழகத்தில் 25 வட்டங்கள் வறட்சி பாதித்த பகுதிகள்: தமிழக அரசு 

தமிழகத்தில், மழை குறைவாக பெய்த, 6 மாவட்டங்களில் 25 வட்டாரங்களை தமிழக அரசு மிதமான வேளாண் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து, அரசாணை வெளியிட்டுள்ளது.

 தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையில், கடந்த 2022ஆம் ஆண்டில் வடகிழக்குப் பருவமழையின் போது குறைந்த மழைப்பொழிவு இருந்த பகுதிகள் மிதமான வேளாண் வறட்சிப் பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில், 
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோயில், மணல்மேல்குடி, சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை, காளையார்கோவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் போகலூர், கடலாடி, திருவாடானை, ராமநாதபுரம், நயினார் கோயில், திருப்புல்லானி, ஆர்.எஸ்.புரம், மண்டபம், முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, தென்காசி  மாவட்டத்தில் ஆலங்குளம், கடையநல்லூர், கீழ்ப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆள்வார்திருநகரி, விருதநகர் மாவட்டத்தில் நரிக்குடி, திருச்சுழி உள்ளிட்ட 25 வட்டாரங்கள், மிதமான வேளாண் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 

Tags :

Share via