தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்: ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் நேரில்சென்றுசிறுவனின் தாயாருக்கு ஆறுதல் தெரிவித்தார்

by Staff / 12-09-2023 12:43:58pm
தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்: ஆணையர்  ஜெ. ராதாகிருஷ்ணன் நேரில்சென்றுசிறுவனின் தாயாருக்கு ஆறுதல் தெரிவித்தார்

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட மதுரவாயல் பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் தெருவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுவனின் வீட்டுக்கு மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் நேரில் சென்றுசிறுவனின் தாயாருக்கு ஆறுதல் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுமேற்கொண்டு, சுகாதார நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அரசு மற்றும் மாநகராட்சி கட்டிடங்கள், புதிய கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களிலும் கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட வேண்டும். டெங்கு கொசு உற்பத்தியாகக்கூடிய நன்னீர் தேங்கிய இடங்களிலும், டயர்கள் மற்றும் உபயோகமற்ற பொருட்களை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அனைத்து பள்ளிகள், பூங்காக்கள், அரசு கட்டிடங்களில் உள்ள தேவையற்ற மழைநீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via