யூடியூபர் டிடிஎப் வாசனின் ஜாமீன் மனு 2வது முறையாக தள்ளுபடி

by Staff / 26-09-2023 12:08:39pm
யூடியூபர் டிடிஎப் வாசனின் ஜாமீன் மனு 2வது முறையாக தள்ளுபடி


காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி அருகே பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் கடந்த வாரம் விபத்துக்குள்ளானது. பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்குதல், வீலிங் செய்தல் உள்ளிட்ட புகார்களில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அக்டோபா் 3ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் டி.டி.எப் வாசன் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via