தேங்காபட்டணம் மீனவர்கள் 30 பேர் பிரிட்டிஷ் கடற்படையால் கைது

by Staff / 06-10-2023 05:21:32pm
தேங்காபட்டணம் மீனவர்கள் 30 பேர் பிரிட்டிஷ் கடற்படையால் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தின் தேங்காய்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடந்த 15-ம் தேதி சின்னத்துறை மீனவர் கிராமத்தை சேர்ந்த சைமன் பாஸ்டினுக்கு சொந்தமான 2 விசைப்படகுகளில் சின்னத்துறை, தூத்தூர், ரவிபுத்தன் துறையை சேர்ந்த 28 மீனவர்களும், நாகை மாவட்டத்தை சேர்ந்த 2 மீனவர்களும் திருவனந்தபுரத்தை சேர்ந்த 2 மீனவர்கள் என 32 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
கடந்த 27-ந்தேதி ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது எல்லைதாண்டியதாக கூறி பிரிட்டிஷ் கடற்படையினர் படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 32 மீனவர்களையும் சிறைபிடித்தனர். பின்னர் இந்திய பெருங்கடலில் இங்கிலாந்து நாட்டிற்கு சொந்தமான டீகோ கார்சியா தீவு பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு 32 மீனவர்களை கைது செய்து மீன்கள் மற்றும் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்ட னர். பின்னர் கைது செய்யப்பட்டு 32 மீனவர்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மீனவர்கள் கைது செய்யப்பட்ட தகவல் குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் கவலை அடைந்துள்ளனர். டீகோ கார்சியா தீவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் குடும்பத்தினர் குமரி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

 

Tags :

Share via