சி.பி.எஸ்.இ ஆசிரியர் தகுதித்தேர்வு [சி டெட் தேர்வு-] 

by Admin / 05-11-2023 09:22:41pm
சி.பி.எஸ்.இ ஆசிரியர் தகுதித்தேர்வு [சி டெட் தேர்வு-] 

சி.பி.எஸ்.இ  மத்திய அரசு ஆசிரியர் தகுதித்தேர்வு [சி டெட் தேர்வு-]  ஜனவரி- 21

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரியர் பணியில் சேருவதற்கு சிடெட் என்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இரு தாள்கள் கொண்ட இந்த தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.அதன்படி, நடப்பாண்டுக்கான சிடெட் தேர்வு ஜனவரியில் [ 21.01.2024-ம் தேதி] நடைபெறவுள்ளது. .இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு இரண்டுநாளுக்கு முன்பு தொடங்கியது.. விருப்பமுள்ளவர்கள் /ctet.nic.in/ என்ற இணையதளம் மூலமாக நவம்பர் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். .இதுகுறித்த கூடுதல் தகவல்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் .என்று சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சு, அரசு. மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை (CTET) நடத்தும் பொறுப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திடம் இந்தியா ஒப்படைத்துள்ளது..

விண்ணப்பதாரர்கள் கல்விப் பகுதியில் தயாரிப்பதற்கு NCTE பரிந்துரைத்த உண்மையான பாடப் புத்தகங்கள் மற்றும் பாடத்திட்டங்களை மட்டுமே பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்..

 

Tags :

Share via