2 மணி நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்பவர்களை பிடிக்க தனிப்படை

by Staff / 11-11-2023 03:57:00pm
2 மணி நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்பவர்களை பிடிக்க தனிப்படை

தீபாவளி அன்று நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிப்பவர்களை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசுதீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியுள்ளது.இந்த நிலையில், தீபாவளியன்று 2 மணி நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்பவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னையில் உள்ள 102 காவல் நிலையங்களில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 காவலர்கள் அடங்கிய தனிப்படையை சென்னை காவல்துறை அமைத்துள்ளது. தனிப்படை காவலர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில், ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அச்சமயம் 2 மணி நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவலர்களால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே தீபாவளியை முன்னிட்டு சென்னைமாநகரின் முக்கிய இடங்களில் சுமார் 18, 000 போலீஸார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via