அரசு வேலை ஆசைகாட்டி 100 பேரிடம் பணம் மோசடி

by Staff / 23-11-2023 05:29:36pm
அரசு வேலை ஆசைகாட்டி 100 பேரிடம் பணம் மோசடி


போலியாக நேர்முக தேர்வு நடத்தி, வங்கிகள், மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் வேலை வாங்கித் தருவதாக, ரேணுகா, 55, அவரது மகள் சியாமளீஸ்வரி, 26, ஆகியோர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள், மத்திய, மாநில அரசு அலுவலங்களில், உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் எங்களின் நட்பு வட்டத்தில் உள்ளனர். இவர்களிடம் பணம் கொடுத்து, வங்கிகள் மற்றும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் வேலை வாங்கித் தரும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம் எனக் கூறி சென்னை, மாதவரத்தைச் சேர்ந்த பழனி என்பவருக்கு எஸ்.பி.ஐ., வங்கியில் வேலை வாங்கித் தருவதாக, 3.37 லட்சம் ரூபாய் வாங்கி, மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து பழனி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கலாராணி தலைமையிலான போலீசார் விசாரித்து, ரேணுகா, சியாமளீஸ்வரி, இவர்களது கூட்டாளி ரெஜி ஞானபிரகாசம் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, கைது செய்யப்பட்டனர். இதுவரை, 100 பேரிடம், 4.50 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளோம். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

Tags :

Share via