கிருஷ்ணா நதி நீர் வழக்கு: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண உச்ச நீதிமன்ம் அறிவுறுத்தல்

by Editor / 02-08-2021 07:25:24pm
கிருஷ்ணா நதி நீர் வழக்கு: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண உச்ச நீதிமன்ம் அறிவுறுத்தல்

கிருஷ்ணா நதி நீரை பகிர்ந்து கொள்வதில் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கிடையே சிக்கல் நிலவி வருகிறது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், ஆந்திர அரசு சார்பில், இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கிருஷ்ணா நதியிலிருந்து மின்சார தேவைக்காக தெலங்கானா மாநிலம், பாரபட்சமின்றி நீரை எடுக்கிறது என்றும் இது 2015 ஆண்டு மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு எதிரானது என்று தெரிவித்திருந்தது.

இந்த மனுமீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமர்வில் வந்தது. அப்போது, தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தான் இரண்டு மாநிலங்களுக்கும் சொந்தமானவன் என்று கூறியவர், இரு மாநிலங்களும், இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணும்படி கோரிக்கை விடுத்தார். மேலும் வழக்கறிஞங்களிடம், உங்களின் அரசுகளை சமாதானப்படுத்தி பிரச்னையை தீர்க்க பாருங்கள். இதில், தேவையில்லாமல் தலையிட நாங்கள் விரும்பவில்லை' என்றார்.

மேலும், நான் இரண்டு மாநிலங்களுக்கும் சொந்தமானவன். இந்த வழக்கை 'சட்டப்பூர்வமாக விசாரிக்க எனக்கு விருப்பமில்லை. பேச்சுவார்த்தையின் மூலம் இவ்விவகாரத்திற்கு தீர்வு காண முடிந்தால் அதனை தயவு செய்து செய்யுங்கள். எங்களால் உங்களுக்கு உதவி செய்ய முடியும். அப்படி இல்லையெனில், வேறு அமர்வுக்கு இவ்வழக்கை மாற்றுகிறேன் என கூறினார்.

 

Tags :

Share via