சீமானுக்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆலோசனை

by Staff / 05-02-2024 03:27:25pm
சீமானுக்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆலோசனை

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்திற்கு டாட்டா காட்டப் போகிறார் என்று சீமான் விமர்சித்து இருந்தார்

. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர்,

"சீமான் முதலில் அவரது கட்சியை காப்பாற்றும் வேலையை  பார்க்கட்டும். .தேசத்திற்கு எதிரானவர்கள் என்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் சோதனை நடக்கிறது. சீமானின் கட்சி வேகமாக கலைந்து கொண்டிருக்கிறது. அண்ணாமலையை வம்புக்கு இழுத்தால் புதிய இமேஜ் கிடைக்கும் என்பது தமிழகத்தில் புது ஸ்டைலாக உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஓனராக நான் இருந்தால், 11 தமிழ்நாட்டுக்காரன் தான் விளையாட வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன். தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அந்த அளவுக்கு தகுதி உடையவர்களாக உருவாக்குவேன் என்று சொல்லுவேன். தமிழகத்தில் இருக்கக்கூடியவர்களை இந்தியா முழுவதும் உள்ள ஐ.பி.எல் டீமில் விளையாட வைப்பேன் என்று சொல்லுவேன் . தவிர, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சீமான் சொல்வது போல சென்னை சூப்பர் கிங்ஸில் 11 பேர் இவர்கள் தான் விளையாடுவார்கள் என்று சொல்ல மாட்டேன். காரணத்தோடு பேசுபவன் நான்.. எதையோ ஒன்று பேசுபவன் நான்அல்லன். எனக்கும் சீமானுக்கும் நிறைய வேறுபாடுகள்: வித்தியாசங்கள் உள்ளன., "என்று  சீமானை கடுமையாக சாடினார்.

 

Tags :

Share via