சாதி, மத அடிப்படையில் வாக்கு சேகரிக்க தடை

by Staff / 16-03-2024 04:11:45pm
சாதி, மத அடிப்படையில் வாக்கு சேகரிக்க தடை

மதுபானம், பணம், பரிசுப் பொருட்கள், போதைப்பொருள் நடமாட்டம் தடுக்கப்படும். சமூக வலைதளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படும். தேர்தல் ஆணையர்கள் உள்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், வதந்தி பரப்பக் கூடாது. உறுதி செய்யப்படாத, திசை திருப்பக் கூடிய விளம்பரங்களை அரசியல் கட்சிகள் வெளியிடக் கூடாது. சாதி, மத அடிப்படையில் வாக்கு சேகரிக்க தடை. தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் வெறுப்பு பேச்சுகளை தவிர்க்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo