பாலஸ்தீனில் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் 1 குழந்தை பலி

by Staff / 20-04-2024 03:43:50pm
பாலஸ்தீனில் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் 1 குழந்தை பலி

பாலஸ்தீன் மீது இஸ்ரேல் கடந்த 8 மாதங்களாக தாக்குதல் நடத்தி வவரும் நிலையில் போரில் சிக்கியுள்ள குழந்தைகளின் நிலை குறித்து ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, போர் காரணமாக பாலஸ்தீனில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை உயிரிழக்கிறது அல்லது படுகாயமடைகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி தற்போது வரை 34,049 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 76,901 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 68 பேர் காயமடைந்துள்ளனர்.

 

Tags :

Share via