சவுக்கு சங்கரின் வலது கை முறிவு..?

by Staff / 07-05-2024 12:27:40pm
சவுக்கு சங்கரின் வலது கை முறிவு..?

காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் சிறையில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறையில் சவுக்கு சங்கரை இரவு முழுவதும் கண்களைக் கட்டி பெஞ்சில் படுக்க வைத்து 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் அடித்ததில் வலது கை முறிந்துள்ளது.
அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக நீதிபதியிடம் ஏற்கனவே தெரிவித்து இருந்தோம். ரிமாண்ட் செய்யும் முன்பு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. சிறைக்கு செல்லும் முன் அவர் ஆரோக்கியமாக இருந்தார். தற்போது அவரை கை எழும்பை உடைத்துள்ளனர் என பரபரப்பு பேட்டியளித்தார்.

 

Tags :

Share via