கறி சாப்ஸ் செய்முறை

by Admin / 08-08-2021 04:45:36pm
கறி சாப்ஸ் செய்முறை

தேவை

சாப்ஸ் கறி – 1/4 கிலோ (எலும்புடன் சேர்த்து பெரிய துண்டாக வாங்கவும்)

பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி வற்றல்

கொத்தமல்லி – 1 மேஜைக்கரண்டி

கசகசா – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 மேஜைக்கரண்டி

சின்ன வெங்காயம் – 8 (வெட்டியது)

தேங்காய் – 1 மூடி

இஞ்சி – சிறியது

பூண்டு – 4 பல்

முந்திரிப்பருப்பு – 15

உப்பு, மஞ்சள்

செய்முறை

பாதி தேங்காயில் பால் எடுக்கவும். மீதி தேங்காயை மேலே உள்ள மசாலா சாமான்களுடன் சேர்த்து அரைத்து இரண்டாவது பாலில் கலந்து கறியையும் போட்டு,

உப்பு மஞ்சள் சேர்த்து குக்கரில் நன்றாக வேக வைக்கவும். பின் இரும்புச்சட்டியில் நெய் 2 கரண்டி நல்லெண்ணெய் 2 கரண்டி ஊற்றி, முந்திரிப்பருப்பு 9 பட்டை சிறிது, கிராம்பு 3 ஏலக்காய் 3 போட்டு தாளித்து வெங்காயத்தை வதக்கி முதல் பாலையும் சேர்த்து ஊற்றி, குழம்பு வற்றி எண்ணெய் தெளியவும் இறக்கவும்.

 

 

Tags :

Share via