2024 மக்களவைத் தேர்தலின் 5ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது.

by Editor / 20-05-2024 08:49:01am
2024 மக்களவைத் தேர்தலின் 5ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது.

மக்களவைத் தேர்தலின் 5ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது.6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
 
பீகாரில் 5, ஜம்மு காஷ்மீரில் 1, ஜார்க்கண்டில் 3, லடாக்கில் 1, மகாராஷ்டிராவில் 13, ஒடிசாவில் 5, உத்தரப் பிரதேசத்தில் 14, மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகளுக்கு  5ம் கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
 
உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி, ரேபரேலி, லக்னோ மற்றும் கைசர்கஞ்ச்; பீகாரில் சரண், ஆறு மும்பை மக்களவைத் தொகுதிகள், மகாராஷ்டிராவில் கல்யாணில் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, சிராக் பாஸ்வான் உள்ளிட்ட 695 வேட்பாளர்கள் 49 தொகுதிகளில்  களத்தில் உள்ளனர்.
 

 

Tags : 5ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது.

Share via