திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜன14ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

by Editor / 09-01-2025 08:27:33am
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜன14ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜன., 14ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், மற்ற கால பூஜைகள் நடைபெறவுள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இக்கோயிலுக்கு பாதயாத்திரையாக வருவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

 

Tags : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜன., 14ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்படுகிறது

Share via

More stories

Logo