அயோத்தியா: நூறாண்டு பழமைவாய்ந்த  கோயிலிலிருந்து 8 சிலைகள் திருட்டு

by Editor / 23-09-2021 03:33:18pm
அயோத்தியா: நூறாண்டு பழமைவாய்ந்த  கோயிலிலிருந்து 8 சிலைகள் திருட்டு


 உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியாவில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த கோயிலில் 8 பழங்காலச் சிலைகள் திருடிப்போயுள்ளன.


கோயிலிலிருந்த 8 சிலைகள் காணாமல் போனது குறித்து புதன்கிழமை தெரிய வந்ததைத் தொடர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் சைலேஷ் குமார் பாண்டே கூறுகையில், கோயிலிலிருந்து திருடுப் போன சிலைகள் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதலில் 9 சிலைகள் திருடுப்போனதாக நம்பப்பட்டது. பிறகு, ஒரு சிலை மட்டும் கோயில் வளாகத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகிறோம் என்றார்.
பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் உள்ளது. புதன்கிழமை காலை கோயிலுக்கு வந்த பூசாரி, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு கோயில் சிலைகள் திருடிப்போயிருந்ததைப் பார்த்து தகவல் கொடுத்தள்ளார்

 

Tags :

Share via