தருமபுரியில் ரூ. 12 கோடியில் மகப்பேறு, பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு -முதல்வர்கட்டடத்தை திறந்து வைத்தார்

by Editor / 30-09-2021 10:19:54am
தருமபுரியில் ரூ. 12 கோடியில் மகப்பேறு, பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு -முதல்வர்கட்டடத்தை திறந்து வைத்தார்

தருமபுரியில் ரூ. 12 கோடியில் புதிதாக கட்டப்பட்ட மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு சிகிச்சைப் பிரிவு கட்டடத்தை வியாழக்கிழமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வியாழக்கிழமை (செப். 30) தருமபுரி வருகை தந்தார்.

முதல்வா் மு.க.ஸ்டாலின், செப். 30-ஆம் தேதி காலை 9 மணிக்கு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று, ரூ. 12 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு சிகிச்சைப் பிரிவு கட்டடம், இதர அரசுத் துறைகள் சாா்பில் கட்டப்பட்ட கட்டடங்களை பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தார்.

 

Tags :

Share via

More stories

Logo