குற்றால அருவிகளில் ஒரே சமயத்தில் எத்தனை நபர்கள் குளிக்கலாம் -மாவட்ட நிர்வாகம் தகவல்

by Editor / 19-12-2021 09:48:16pm
குற்றால அருவிகளில் ஒரே சமயத்தில் எத்தனை நபர்கள் குளிக்கலாம் -மாவட்ட நிர்வாகம் தகவல்

தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலம் ஐந்தருவி பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கொரோனா தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல்  தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்  20 ஆம் தேதியான நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவி ஐந்தருவி புலியருவி குண்டாறு அணை பகுதியில் உள்ள அருவிகள் மேக்கரை பகுதிகள்  உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் கடந்த 4ஆம் தேதி அனுமதி வழங்கியது.

இதன் தொடர்ச்சியாக குற்றால அருவிகளில் நாளை 20ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் குற்றாலம் மெயின் அருவியில் ஒரே நேரத்தில் 10 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் குளிக்கவும், ஐந்தருவியில் ஒரே நேரத்தில் 10 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் குளிக்கவும், பழைய குற்றால அருவியில் ஒரே நேரத்தில் 5 ஆண்கள் மற்றும் 10 பெண்கள்  மட்டுமே சமூக இடைவெளியுடன் உடல் வெப்ப அளவை கண்டறிந்து குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். 

 

Tags :

Share via