5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுமா .

by Admin / 27-12-2021 04:26:52pm
5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுமா     .

வேகமாக பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே பிப்ரவரி, ஏப்ரல் மாதங்களில் உத்தரபிரதேசம், மணிப்பூர், உத்தரகண்ட், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது தொற்று அதிகரித்து வருவதால், தேர்தலை சில மாதங்களுக்கு ஒத்திவைப்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என அண்மையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தது. மேலும் தேர்தல் பிரச்சார பேரணிகளை உடனடியாக தடை தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியது.

இந்தநிலையில், தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷனை டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
 
இதில் தேர்தல் நடத்தவுள்ள 5 மாநிலங்களில் தற்போதைய கொரோனா நிலவரம் மற்றும் ஒமிக்ரான் சூழலில் தேர்தலை நடத்துவது சாத்தியமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் அம்மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள விகிதம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தேர்தலை நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து ஜனவரி மாதத்தில் மீண்டும்  ஆலோசனை கூட்டத்தை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 


 

 

Tags :

Share via