கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய ஜெய் ஹிந்த் என்ற வார்த்தையை பயன்படுத்திய ஆளுநர்.

by Writer / 05-01-2022 12:21:35pm
கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய ஜெய் ஹிந்த் என்ற வார்த்தையை பயன்படுத்திய ஆளுநர்.

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின் நடக்கும் இரண்டாவது கூட்டத்தொடர் ஆகும் இது. இன்று ஆளுநர் ஆர். என் ரவி உரையுடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது.


திமுக ஆட்சிக்கு வந்த பின் கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை ஆற்றினார். கடந்த முறை ஆளுனர் புரோஹித் ஆற்றிய உரை பெரிய அளவில் கவனம் பெற்றது.  அப்போதைய ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் உரையின் முடிவில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையும், மத்திய அரசு என்ற வார்த்தையும் இல்லாதது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலாக ஒன்றிய அரசு என்ற வார்த்தை இடம்பெற்று இருந்தது. ஆளுநர் உரை என்பது ஆளும் கட்சியின் நிதித்துறை தயாரித்துக் கொடுக்கிற உரை ஆகும். ஆளுநர் இதை வெறுமனே படிப்பார்.பொதுவாக ஆளுநர் இதில் எதுவும் சேர்க்க கூடாது. மாற்றம் இருக்காது ஆனால் சமயங்களில் சில மாநிலங்களில் ஆளுநர்கள் தங்கள் உரையில் சில விஷயங்களை மாற்றிய வரலாறும் உண்டு. இந்த நிலையில்தான், கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு பற்றிய விவாதமும், ஜெய் ஹிந்த் பற்றிய விவாதமும் பெரிய கவனம் பெற்றது. ஒன்றிய அரசு என்ற வார்த்தை பிரயோகம் தவறு கிடையாது. அரசியலமைப்பு சட்டத்திலேயே இப்படித்தான் இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். இப்படிப்பட்ட சூழல்களின் பின்னணியில்தான் ஆர்.என்.ரவியின் உரையுடன் 2022 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டம் இன்று தொடங்கியது. எதிர்பார்ப்பு இந்த முறை ஆளுநர் ரவி உரையில் ஜெய் ஹிந்த் வார்த்தை இடம்பெறுமா என்று கேள்வி எழுந்தது. இந்த முறை ஆர். என் ரவியின் உரையை தமிழ்நாடு அரசின் நிதித்துறை தயாரித்துள்ளது. கடந்த ஜனவரி 1-ந் தேதி அவரது உரையின் ஆங்கில வடிவத்தை ராஜ்பவனுக்கு திமுக அரசு அனுப்பி இருந்தது. இதில் ஜெய் ஹிந்த் என்ற வார்த்தை இடம்பெறுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. என்ன பேசினார் இந்த நிலையில் இன்று ஆளுனர் ஆர்.என் ரவி உரையில், தமிழ்நாடு அரசு கொரோனா பரவலை சிறப்பாக கையாண்டு வருகிறது. தமிழ்நாடு சட்டசபையில் முதல்முறையாக பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது.தமிழ்நாடு சட்டப்பேரவை மிகப்பெரிய பாரம்பரியங்களை கொண்டது. கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கே முன்னோடியாக உள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ரூ. 1 லட்சம் கோடியாக உயர்த்த திட்டம் உள்ளது. ஜிஎஸ்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் நலனைக் காப்பதில் அரசு உறுதியாக உள்ளது. இதற்காக நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. திராவிட கலாச்சாரம் திராவிட கலாச்சாரம் என்பது சமூக நீதி மீது கவனம் செலுத்த கூடியது. சுயமரியாதை கொள்கை கொண்டது. மக்களை மேலே கொண்டு வரும் கொள்கையுடன் அரசு செயல்பட்டு வருகிறது. முக்கியமாக பிற்படுத்தப்பட்ட மக்கள், இருளர், ஆதி திராவிடர்களை முன்னேற்றுவதில் திராவிட அரசியல் கொள்கை பெரிய பங்கு வைக்கிறது. தமிழ்நாடு அரசு இதில் சிறப்பான கவனம் செலுத்தி வருகிறது, என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார். என்ன சொன்னார் இதையடுத்து கடைசியில் ஆளுநர் ஆர். என் ரவி ஜெய் ஹிந்த் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார். மகா கவி பாரதியாரின் கவிதையுடன் உரையை நிறைவு செய்த ஆளுநர், வாழ்க தமிழ்.. வளர்க தமிழ்நாடு.. எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய ஜெய் ஹிந்த் என்ற வார்த்தையை பயன்படுத்திய ஆளுநர்.
 

Tags :

Share via