தமிழகத்தில் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு.

by Editor / 05-01-2022 02:24:24pm
தமிழகத்தில் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு.

இன்று காலை 10 மணிக்கு மேல் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அனைவரும் அந்தந்த மாவட்டங்களில் வாக்காளர் இறுதி பட்டியலை வெளியிடப்பட்டன.இந்த வாக்காளர் பட்டியலை இணையதளத்திலும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும். 


தென்காசி மாவட்டத்தில் விரைவில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது .அதற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் கோபாலசுந்தரராஜ் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட ஆட்சியர் நேர்முக உதவியாளர் ராஜ மனோகரன் பெற்று கொண்டார். தேர்தல் வட்டாட்சியர் கங்கா மற்றும் தென்காசி தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சந்தோஷ், பாஜ.க தென்காசி மாவட்ட ஊடக பிரிவு தலைவர் செந்தூர் பாண்டியன் உள்ளிட்ட  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

 

Tags :

Share via