மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இன்று தொடக்கம்

by Editor / 19-01-2022 09:09:35am
 மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இன்று தொடக்கம்

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு 2021-22 ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்,மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் ஆகிய படிப்புக்களுக்கு 4 சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெற உள்ளது.குறிப்பாக,ஓபிசி பிரிவினருக்கு 27% மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுபிரிவினருக்கு 10% இடஒதுக்கீடும் வழங்கப்படுகிறது.

அதன்படி,நீட் தேர்வில் தகுதி பெற்றமாணவ, மாணவிகள் https://www.mcc.nic.in/#/home என்ற இணையதளத்தில் இன்று முதல் 24 ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,வருகின்ற 27, 28 ஆம் தேதிகளில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் .அதன்பின்னர், இடஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் ஜனவரி 29 ஆம் தேதி வெளியிடப்படும்.
மேலும்,மருத்துவ கலந்தாய்வின் இரண்டாம் சுற்று பிப்.9 ஆம் தேதியும், 3 ஆம் சுற்று மார்ச் 2 ஆம் தேதி, 4 ஆம் சுற்று மார்ச் 21 ஆம் தேதியும் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : MBBS-admission

Share via