உ.பி.,யில் பூங்காவில் கொரோனாவுக்கு இரண்டு சிங்கங்கள் பாதிப்பு

by Editor / 08-05-2021 05:00:01pm
உ.பி.,யில் பூங்காவில் கொரோனாவுக்கு இரண்டு சிங்கங்கள் பாதிப்பு


 உ.பி.,யில் எட்டாவா சஃபாரி பூங்காவில் இரண்டு சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை உச்சத்திலுள்ளது. தினந்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாதொற்றால் பாதிக்கப்படுகின்றனர். தற்போது விலங்குகளுக்கும்  பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. முன்னதாக, தெலங்கானா நேரு உயிரியல் பூங்காவில் 8 ஆசியா சிங்கங்களுக்கு  தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள எட்டாவா சஃபாரி பூங்காவில் இரண்டு சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பூங்கா நிர்வாகிகள் கூற்றுப்படி, " ஏப்ரல் 30 அன்று 9 வயதான லயனஸ் ஜெனிபர் சிங்கத்துக்கும், 4 வயதான கவுரி சிங்கத்துக்கும் வெப்பநிலை பரிசோதித்தில் 104 முதல் 105 டிகிரி செல்சியஸ் வரை இருந்துள்ளது.இதையடுத்து, சிங்கங்களில் மாதிரிகள் பரிசோதனைக்காக இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இரண்டு சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் உடல்நிலை சீராக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via