மனித மூளையை கட்டுப்படுத்தும் சிப் - விரைவில் தொடக்க உள்ளதாக வெளியான தகவல்

by Admin / 22-01-2022 05:03:48pm
மனித மூளையை கட்டுப்படுத்தும் சிப் - விரைவில் தொடக்க உள்ளதாக வெளியான தகவல்

உலகில் மிகப் பெரும் பணக்காரராக திகழ்ந்து வரும் அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க், பல புதுமையான தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் உள்ளவராக கருதப்படுகிறார்..

விண்வெளிக்கு சுற்றுலா பயணம் மற்றும் தானாக இயங்கும் கார் என பல புதுமையான கண்டிப்புகளை மக்களின் முன் நிறுத்தி வருகிறார்.

இதனை தொடர்ந்து அவர் தற்போது மனித மூளையை இயந்திரங்களை வைத்து செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை கண்டறிந்து அதனை சோதனை செய்யும் அளவிற்கு கொண்டு வந்துள்ளனர். 

இந்த வகையான தொழில்நுட்பத்தை ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நியூராலிங்க் என்ற நிறுவனத்தில் மிகப் பெரிய அளவிலான முதலீட்டை எலான் மஸ்க் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
 
மேலும் இந்த தொழில்நுட்பம் வாயிலாக மனித மூளையில் ஒரு சிறிய சிப் பொருத்தப்படும் எனவும் அதனை கம்பியூட்டர் மொபைல் போன் போன்றவையான சாதனங்களுடன் இணைக்கப்பட்டும் அதனுடன் சாதனங்களை கையால் தொடாமலே நினைவுகளை அடிப்படையாக கொண்டு அதன் வாயிலாக இயக்க முடியும் என்கின்றனர்.

மேலும் மூளையில் ஏற்படும் பாதிப்புகளை இந்த சிப் உதவியின் மூலம் சரிசெய்யலாம் என கூறப்படுகிறது.

கடந்த 2017ல் இந்த ஆய்வு குறித்து எலான் மஸ்க் அறிவித்தார். அந்த நிறுவனம், பன்றிகள் மற்றும் குரங்குகளில் பரிசோதனை செய்துள்ளது. தற்போது மனிதர்கள் மூளையில் சிப்களை பொருத்துவதற்கான ஆராய்ச்சிகளை துவக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக மருத்துவ நிபுணர்களை பணியில் அமர்த்த இந்த நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. விரைவில் அனுமதிபெற்று மருத்துவப் பரிசோதனைகள் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via