மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை : முதல்வர் ஸ்டாலின்!

by Editor / 12-05-2021 10:31:36am
மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை : முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது. இதனால் மே மாதம் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 29,272 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்த கொரோனா பாதிப்பு 14,38,509 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 298 பேர் பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 16,178 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 19,172 பேர் பூரண நலன் பெற்றதை தொடர்ந்து, மொத்த பூரண நலன் பெற்றோரின் எண்ணிக்கை 12,60,152 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா சிகிச்சை பணியின் போது 43 மருத்துவ பணியாளர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா சிகிச்சை பணியின்போது உயிரிழந்த 43 மருத்துவ பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், கொரோனாவின் இரண்டாவது அலை பரவலில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊக்கத்தொகை, செவிலியர்களுக்கு ரூ.20 ஆயிரம், இதர பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via