தாம்பரம்-நெல்லை கோடைகால சிறப்பு ரயில்: முன்பதிவு* தொடங்கியது!

by Staff / 09-03-2023 05:37:00pm
தாம்பரம்-நெல்லை கோடைகால சிறப்பு ரயில்: முன்பதிவு* தொடங்கியது!

கோடை விடுமுறையையொட்டி தாம்பரம்-நெல்லை இடையே, வாராந்திர சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட உள்ளன.இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு வியாழக்கிழமை காலை 8. 30 மணிக்கு தொடங்கியது.ஏப்ரல் முதல் தொடர்சியாக 12 வாரங்கள் தாம்பரம்-நெல்லை இடையே கோடைகால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நெல்லையில் இருந்து இரவு 7. 20 மணிக்கும், திங்கள்கிழமை தோறும் தாம்பரத்தில் இருந்தும் இரவு 10. 20 மணிக்கு இந்த சிறப்பு ரயில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சிறப்பு ரயில்கள் திருநெல்வேயில் இருந்து ஏப்ரல் 2, 9, 16, 23, 30; மே 7, 14, 21, 28; ஜூன் 4, 11, 18, 25 ஆம் தேதிகளில் இரவு 7. 20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 9. 20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.சென்னை தாம்பரத்தில் இருந்து ஏப்ரல் 3, 10, 17, 24; மே 1, 8, 15, 22, 29; ஜூன் 5, 12, 19, 26 ஆம் தேதிகளில் இரவு 10. 20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10. 40 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.தென்காசி, சிவகாசி, விருதுநகர், மதுரை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக இந்த ரயில்கள் இயக்கப்படுகிறது.

 

Tags :

Share via