கமுதியில்போட்டியின்றி தேர்வான 11 பேருக்கு, வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது.

by Editor / 17-02-2022 10:51:16pm
கமுதியில்போட்டியின்றி தேர்வான 11 பேருக்கு, வெற்றி சான்றிதழ்  வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில், சுயேச்சையாக போட்டியிட்ட 10 வார்டு வேட்பாளர்கள் மற்றும் பாஜக சார்பில் போட்டியிட்ட 14 ஆவது வார்டு வேட்பாளர் சத்யாஜோதி என மொத்தம் 11 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள், அனைவருக்கும் கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் ரா. இளவரசி, தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் துணை அலுவலர் ஆகியோர் வெற்றி சான்றிதழ்களை வழங்கினர்.

 

Tags : கமுதி

Share via