பறவைகள் சரணாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை தவளை

by Admin / 24-02-2022 01:03:51pm
 பறவைகள் சரணாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை தவளை

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தட்டக்காடு பறவைகள் சரணாலயம் உள்ளது.
இங்கு பல வகை பறவைகள் மட்டுமின்றி பிற உயிரினங்களும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு புதிய வகை தவளை கண்டறியப்பட்ட நிலையில், ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வந்தனர்.

இதில் சமீபத்தில் ஜலதரா நீர்தத்தித் தவளை எனும் மேலும் ஒரு புதிய வகை தவளை கண்டறியப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு மற்ற நீர்தவளைகளைப் போலவே காணப்பட்டது. 

இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், தட்டக்காடு பறவைகள் சரணாலயத்தில் முதல் முதலாக இந்த ஜலதரா தவளை இனம் கண்டறியப்பட்டது. 

இந்த வகை தவளை மேற்கு கடற்கரை சமவெளிகளில் அதிகம் காணப்படுகிறது.
நன்நீர் உயிரின வகையைச் சேர்ந்தது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பினால் இந்த தவளைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. எனவே இவ்வகை தவளைகளை பாதுகாக்க புதிய பாதுகாப்பு திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
 

 

Tags :

Share via