சட்டவிரோதமாக பட்டாசு தயார் செய்த 3 குடோனுக்கு சீல்...

by Staff / 21-03-2024 01:22:44pm
 சட்டவிரோதமாக பட்டாசு தயார் செய்த 3 குடோனுக்கு  சீல்...

விருதுநகர் மற்றும் சிவகாசி பகுதிகளில் விதிகளை மீறி இயங்கும் பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் கடைகளைக் கண்காணிக்க வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை ஆகிய துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக் குழுக்களை மாவட்ட நிர்வாகம் அமைத்து இருந்தது. இந்த குழுவினர் பட்டாசு ஆலைகளில் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விதிமுறைகளை மீறி இயங்கும் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து வருகின்றனர். கடந்த ஆண்டுவரை சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை பகுதிகளில் விதிமுறைகளை மீறி இயங்கிய 83 பட்டாசு ஆலைகளில் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 40 நாட்களில் விதிமுறைகளை மீறி இயங்கிய 38 பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து உள்ளனர். அதிகாரிகளின் ஆய்வுகளில் அனுமதி இன்றி ஆபத்தான நிலையில் கட்டிடங்களில் பட்டாசு பண்டல்கள் வைத்திருந்தது, தடை செய்யப்பட்ட சரவெடி தயாரித்தது, மரத்தடியில் பட்டாசு தயாரித்தது, அளவுக்கு அதிகமான தொழிலாளர்களை பணியில் அமர்த்தியது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு விதிமுறை மீறல்களில் பட்டாசு ஆலைகள் ஈடுபட்டது தெரிய வந்ததால் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via