உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா நிறுத்த வேண்டும் பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் முடக்கம்

by Admin / 04-03-2022 11:56:15am
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா நிறுத்த வேண்டும் பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப்  முடக்கம்

உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி  ரஷியா தொடங்கிய போர் தொடர்ந்து 9 -வது நாளை எட்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தரை, வான், கடல் என மும்முனை தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தி வருகிறது. 

இதனால் உலக நாடுகள் ரஷியாவை தனிமைப்படுத்தி வருகின்றனர். ஆனால் ரஷியா அதை எதையுமே கண்டுகொள்ளாமல் தனது தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.
 
இதற்கிடையே உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா நிறுத்த வேண்டும் என்று சமூக வலைதளங்களான பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் போன்றவைகளில் கருத்துக்களும், எதிர்ப்புக்களும் தொடர்ந்து பரவி வருகிறது.

இந்நிலையில், ரஷியாவில் பல இடங்களில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

உக்ரைன் போருக்கு எதிரான எதிர்ப்புக் கருத்துகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுந்து வருவதால் ரஷியா இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via