ஏற்காட்டில் பூத்துக் குலுங்கும் காப்பி மலர்கள் விவசாயிகள் மகிழ்ச்சி..

by Editor / 10-05-2024 09:44:04am
ஏற்காட்டில் பூத்துக் குலுங்கும் காப்பி மலர்கள் விவசாயிகள் மகிழ்ச்சி..

ஏழைகளின். ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் முக்கிய விவசாயமாக காப்பி உள்ளது. இங்கு மூன்றில் இரண்டு மடங்கு காம்பி தோடடங்களே உள்ளது. இங்கு விளைவிக்கப்படும் காப்பி உள்ளூர் மட்டுமின்றி வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

கடந்த நான்கு மாதங்களாக ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்யாததால் மார்ச் மாதம் பூக்கவேண்டிய காப்பி மலர்கள் பூக்கவில்லை. இதனால் காப்பி மகசூல் இந்த ஆண்டு குறைந்துவிடும் என்று காப்பி விவசாயிகள் வேதனையில் இருந்தனர் . 

இந்தநிலையில் கடந்த நானகு நாட்களாக ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்தது. மழைபெய்ததினால் காப்பி செடிகளுக்கு போதுமான நீர் கிடைத்தது. இதனால் காப்பி மலர்கள் பூக்க துவங்கியுள்ளது. 

மல்லிகை மலர் போல வெள்ளை நிறத்தில் காப்பி தோட்டங்களில் பூத்துள்ள மலர்கள் காண்போரை மகிழச்சியடைய வைத்துள்ளது.மேலும் இந்த மலர்களால் இருந்து ஒருவிதமான நறுமணம் வீசுகிறது. ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள்இந்த மலர்கள் முன்பு நின்று செல்பி எடுத்து செல்கின்றனர்.
 

 

Tags : ஏற்காட்டில் பூத்துக் குலுங்கும் காப்பி மலர்கள் விவசாயிகள் மகிழ்ச்சி..

Share via