இளைஞர்களிடையே மதுஅருந்தும் பழக்கத்தை அதிகரிக்க ஆலோசனை சொல்லுங்க...

by Editor / 20-08-2022 09:16:37am
இளைஞர்களிடையே மதுஅருந்தும் பழக்கத்தை அதிகரிக்க ஆலோசனை சொல்லுங்க...

மது அருந்துவது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று அறிவித்து விட்டு மது  விற்பனையால் கஜானாவை நிரப்பும்  அரசு இருக்கிறது என்றால் அதில் ஜபிபானும் ஓன்று.ஆமாங்க..ஜப்பான் நாட்டில் வரி வருவாய் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளாதால், அதனை சரிசெய்யும் பொருட்டு, மக்கள்
தொடர்ந்து மது அருந்த வேண்டும் என அரசு கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

பல்வேறு நாடுகளும் வரி வருவாயை பெருக்க கையில் எடுக்கும் முதல் ஆயுதம் மதுபானம்தான். குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜெர்மனி, தாய்லாந்து, மலேசியா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இதில் அடங்கும்.

கொரோனா தொற்று பரவலுக்கு பின்பு ஜப்பானில் பொதுமக்களிடையே மது அருந்தும் பழக்கம் வெகுவாக குறைந்துள்ளது.ஜப்பானில், 40 முதல் 60 வயது வரை உள்ளவர்களில் சுமார் 30 சதவிகிதம் பேர் தவறாமல் மது அருந்துகிறார்கள், அதாவது வாரத்திற்கு மூன்று நாட்கள் அல்லது அதற்கு மேல் 20 வயதிற்குட்பட்டவர்களில் 7.8 சதவிகிதம் பேர் மது அருந்துகின்றனர்.

1995ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஜப்பானில் சராசரியாக ஒரு வருடத்திற்கு ஒரு நபர் 100 லிட்டர் மது அருந்திவந்துள்ளார். அதுவே 2020ஆம் ஆண்டு ஒரு நபர் வெறும் 75 லிட்டர் மட்டுமே மது அருந்தும் அளவுக்குக் குறைந்துள்ளது.

2011ஆம் ஆண்டு ஜப்பானின் வரி வருவாயில் 3 சதவிகிதம் மது விற்பனையிலிருந்து வந்துள்ளது. அது 2020ஆம் ஆண்டு 1.7 சதவிகிதமாக மாறியுள்ளது. இதனால் பல நூறு கோடிகள் வருவாய் இழப்பு ஜப்பான் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

மது மீதான வரி வருவாய் 1980ல் 5 சதவிகிதத்தில் இருந்து 2020ல் 1.7 சதவிகிதமாக சரிந்துள்ளது.இதனை சரி செய்து வரி வருவாயை பெருக்க, ஜப்பானின் தேசிய வரி ஏஜென்சி Sake Viva-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. சேக் விவா என்ற பிரச்சாரத்தையும் ஜப்பான் அரசாங்கத்தின் தேசிய வரி நிர்வாகம் தொடங்கியுள்ளது.

அதன்படி இளைஞர்களிடையே,மதுஅருந்தும் பழக்கத்தை அதிகரிக்க என்ன செய்யலாம் என அரசாங்கம் சார்பில் யோசனைகள் கேட்கப்பட்டுள்ளன.சிறந்த யோசனைகளை வழங்குபவர்களுக்குப் பரிசு மற்றும் விருது வழங்கி பாராட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி செப்டம்பர் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

 

Tags : Advise to increase drinking habit among youth...

Share via