(09-03-2022) ராசி பலன்கள்

by Editor / 09-03-2022 12:26:29am
 (09-03-2022) ராசி பலன்கள்

மேஷம்
மார்ச் 09, 2022

வாகனம் தொடர்பான பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும்.  கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். செலவுகளின் தன்மையை அறிந்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நன்மை நிறைந்த நாள்.

 
அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்


அஸ்வினி : ஆதாயகரமான நாள். 

பரணி : மகிழ்ச்சி உண்டாகும். 

கிருத்திகை : சேமிப்பு மேம்படும்.
---------------------------------------


ரிஷபம்
மார்ச் 09, 2022

வியாபார பணிகளில் உள்ள மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். குணநலன்களில் மாற்றம் உண்டாகும். மனதில் புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு உண்டாகும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் நேரிடும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

 
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு  

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


கிருத்திகை : வெற்றிகரமான நாள். 

ரோகிணி : லட்சியம் பிறக்கும்.

மிருகசீரிஷம் : குழப்பமான நாள்.
---------------------------------------


மிதுனம்
மார்ச் 09, 2022

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். வழக்கு விவகாரங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வரவுக்கு ஏற்ப செலவு உண்டாகும். புதிய நபர்களின் மூலம் நெருக்கடியான சூழல் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மதிப்பு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் 


மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.

திருவாதிரை : இழுபறிகள் குறையும்.

புனர்பூசம் : நெருக்கடியான நாள்.
---------------------------------------


கடகம்
மார்ச் 09, 2022

மூத்த சகோதரர் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் தெளிவும், புத்துணர்ச்சியும் உண்டாகும். இசை சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகளில் அனுபவமும், லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். அமைதி நிறைந்த நாள்.

 
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும். 

பூசம் : ஆர்வம் அதிகரிக்கும். 

ஆயில்யம் : லாபம் கிடைக்கும்.
---------------------------------------


சிம்மம்
மார்ச் 09, 2022

தாய்மாமன் வழியில் இருந்துவந்த மனவருத்தம் குறையும். உத்தியோக பயிற்சி தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். புதுவிதமான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் மேம்படும். புதிய முதலீடுகளின் மூலம் லாபம் அதிகரிக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.

 
அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

 
மகம் : சிந்தனைகள் மேம்படும். 

பூரம் : தடைகள் குறையும். 

உத்திரம் : மகிழ்ச்சியான நாள். 
---------------------------------------


கன்னி
மார்ச் 09, 2022

விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவான சூழல் உண்டாகும். உத்தியோக பணிகளில் கௌரவப் பொறுப்புகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் தொடர்பான  எண்ணங்கள் நிறைவேறும். புரிதல் நிறைந்த நாள்.

   
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 


உத்திரம் : மேன்மையான நாள். 

அஸ்தம் : பொறுப்புகள் மேம்படும். 

சித்திரை : எண்ணங்கள் நிறைவேறும்.  
---------------------------------------


துலாம்
மார்ச் 09, 2022

வியாபார பணிகளில் கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். அரசு சார்ந்த துறைகளில் அலைச்சல்கள் மேம்படும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். பணி நிமிர்த்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நண்பர்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பொறுமை வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

  
சித்திரை : சிந்தித்து செயல்படவும்.

சுவாதி : அனுசரித்து செல்லவும். 

விசாகம் : அனுபவம் கிடைக்கும். 
---------------------------------------


விருச்சிகம்
மார்ச் 09, 2022

வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவங்களும், அறிமுகங்களும் கிடைக்கும். மனதில் நினைத்த எண்ணங்களை நிறைவேற்றி கொள்வீர்கள். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். திறமைகள் வெளிப்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் 


விசாகம் : அறிமுகம் கிடைக்கும். 

அனுஷம் : ஆதரவான நாள். 

கேட்டை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 
---------------------------------------


தனுசு
மார்ச் 09, 2022

விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாள் கவலைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். உடனிருப்பவர்களால் எதிர்பாராத செலவுகளும், நெருக்கடிகளும் உண்டாகும். தேர்வு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். வரவு நிறைந்த நாள்.

 
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்


மூலம் : முடிவு கிடைக்கும்.

பூராடம் : நெருக்கடியான நாள். 

உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும்.
---------------------------------------


மகரம்
மார்ச் 09, 2022

நண்பர்களின் மத்தியில் எதிர்பார்த்த சில உதவி கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். நுண்கலை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் தோன்றும். நிதானம் வேண்டிய நாள்.

 
அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 


உத்திராடம் : உதவி கிடைக்கும். 

திருவோணம் : லாபம் மேம்படும். 

அவிட்டம் : ஆர்வம் உண்டாகும். 
---------------------------------------


கும்பம்
மார்ச் 09, 2022

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய பயிற்சி சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். ஒப்பந்தம் தொடர்பான பணிகள் விரைவில் நிறைவுபெறும்.  சுகம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்


அவிட்டம் : ஏற்ற, இறக்கமான நாள்.

சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

பூரட்டாதி : நிதானம் வேண்டும். 
---------------------------------------

மீனம்
மார்ச் 09, 2022

வியாபார பணிகளில் திறமைகள் மேம்படும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உள்ளுணர்வு சிந்தனைகளின் மூலம் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த சில இடமாற்றங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். சிக்கல் குறையும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் 


பூரட்டாதி : திறமைகள் மேம்படும்.

உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள். 

ரேவதி : மாற்றம் உண்டாகும்.
---------------------------------------

 

Tags :

Share via