ரஷ்யா உக்ரேன் போரில் இந்திய நிலைப்பாட்டில் திருப்தி இல்லை அமெரிக்கா

by Staff / 26-03-2022 04:48:08pm
ரஷ்யா உக்ரேன் போரில் இந்திய நிலைப்பாட்டில் திருப்தி இல்லை அமெரிக்கா

ரஷ்யா உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு திருப்திகரமாக இல்லை என்றும் அதில் ஆச்சரியம் ஏதுமில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை இந்தியா கண்டித்து வந்துள்ள போதும் ஐநா சபை வாக்கெடுப்புகள் தவிர்த்து விட்டது இது குறித்து பேசிய வெள்ளை மாளிகை அதிகாரி மிரா ராப்  இணையவழி கருத்தரங்கில் பேசும்போது குறிப்பிட்டார்.

வரலாற்று ரீதியாக காணும் போது இந்தியாவுக்கு நெருக்கமான உறவு இருப்பது அவர் சுட்டிக்காட்டியுள்ளார் ரஷ்யா உடனான உறவை முறித்துக் கொள்ள இந்தியாவுக்கு மாற்றுக்கள் தேவை படுவதாக தெரிவித்தார்.

அண்மைக்காலங்களில் அமெரிக்காவுடன் இந்திய நெருங்கிய நட்பு கொண்டுள்ளது சீனாவுக்கு எதிரான குவாட்  அமைப்பிலும் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.

 

Tags :

Share via