ஹெச்.டி.எப்.சி நிறுவனம்- ஹெச்.டி.எப்.சி. வங்கியுடன் இணைகிறது.

by Editor / 04-04-2022 11:43:22pm
ஹெச்.டி.எப்.சி நிறுவனம்- ஹெச்.டி.எப்.சி. வங்கியுடன் இணைகிறது.

இந்தியாவில் 1991-ம் ஆண்டுக்குபின்னர் தனியார்கள்  வங்கிகளை துவங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.இதனைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கி முதன் முதலில்  ஹெச்டிஎப்சி வங்கிக்குதான் அனுமதி அளித்தது. இந்த நிறுவனத்தின் சார்பில் 1994-ம் ஆண்டு முதல் ஹெச்டிஎப்சி வங்கி செயல்பட்டுவருகிறது.
முதலில் ஹெச்டிஎப்சியின் துணை நிறுவனங்களான ஹெச்டிஎப்சி ஹோல்டிங்ஸ் மற்றும் ஹெச்டிஎப்சி இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஹெச்டிஎப்சி உடன் இணைய இருக்கிறது. அதன் பிறகு, அடுத்தகட்டமாக ஹெச்டிஎப்சி நிறுவனம் ஹெச்டிஎப்சி வங்கியுடன் இணைய இருக்கிறது. ஒருங்கிணைந்த ஹெச்டிஎப்சி வங்கியில் 41 சதவீத பங்குகள் ஹெச்டிஎப்சி வசம் இருக்கும். 25 ஹெச்டிஎப்சி பங்குகள் இருந்தால் 42 ஹெச்டிஎப்சி வங்கியின் பங்குகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பல ஒழுங்குமுறை அமைப்புகளின் அனுமதி தேவைப்படுவதால் இந்த இணைப்பு முழுமையாக முடிவடைய 18 மாதங்கள் வரை ஆகலாம் என அந்த நிறுவனத்தின் சார்பில்  அறிவிக்கபட்டிருக்கிறது. இந்த இணைப்பு காரணமாக எந்த ஒரு பணியாளர்களும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும், மேலும், ஹெச்டிஎப்சி கிளைகள் எதுவும் மூடப்படாது. பின்னாட்களில் இவை ஹெச்டிஎப்சி வங்கி கிளையாக மாறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

Tags : HDFC BANK

Share via