குற்றாலம் குற்றால நாதர் ஆலயத்தில் சித்திரை விசு திருவிழா தேரோட்டம் 

by Editor / 09-04-2022 03:31:46pm
 குற்றாலம் குற்றால நாதர் ஆலயத்தில் சித்திரை விசு திருவிழா தேரோட்டம் 

தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றால நாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை விசு திருவிழா கடந்த திங்கட்கிழமை காலை கொடியேற்றதோடு தொடங்கியது.சித்திரை விசு திருவிழா வருகிற 14-ந் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் சுவாமி அம்பாள் வீதி உலா ஆகியவை நடைபெற்றன.8-ந் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றநிலையில் இன்று 9-ந் தேதி தேரோட்டம் நடைபெற்றது.இதில் விநாயகர்,முருகன்,சாமி,அம்பாள் ஆகிய 4 தேர்கள் ரதவீதிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.வரும் 11-ந் தேதி காலை 9-30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் நடராஜ மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 12-ந் தேதி காலை 10 மணிக்கு சித்திர சபையில் நடராஜமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 14-ந் தேதி சித்திரை விசு தீர்த்தவாரி நடக்கிறது.


 

 குற்றாலம் குற்றால நாதர் ஆலயத்தில் சித்திரை விசு திருவிழா தேரோட்டம் 
 

Tags :

Share via