பஞ்சு இறக்குமதிக்கு செப்டம்பர் 30 வரை வரி விலக்கு அளித்தது மத்திய அரசு

by Staff / 14-04-2022 05:01:24pm
பஞ்சு இறக்குமதிக்கு செப்டம்பர் 30 வரை வரி விலக்கு அளித்தது மத்திய அரசு

கச்சாப்  பருத்தி இறக்குமதிக்கு வரிவிலக்கு அளித்தது துணிகள் ஆடைகள் ஏற்றுமதி அதிகரிக்கும் என ஆடை ஏற்றுமதியாளர் உட்கட்டமைப்பு தெரிவித்துள்ளது. உள்நாட்டில் பஞ்சு நூல் ஆகியவற்றின் விலை உயர்வால் பின்னலடை ஆயத்த ஆடைத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது இதனால்பருத்தி இறக்குமதிக்கு வரிவிலக்கு அளிக்க தொழில்துறையினர் கோரிக்கை வைத்தனர் .இதை ஏற்று இறக்குமதி மீதான 5 விழுக்காடு சுங்கவரி வேளாண் உட்கட்டமைப்பு 5 விழுக்காடு மேல்வாரிய ஆகியவற்றுக்கு செப்டம்பர் இறுதி வரை வரி விளக்கு அளிப்பதிகா மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரிகளுக்கான மத்திய வாரியம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது இதனால் பஞ்சு நூல் துணிகள் ஆயத்த ஆடைகளின் விலை குறைவு என்றும் இது பிற நாடுகளின் போட்டியை சமாளித்து ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும் என்றும் ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via