1 வதுஅணு உலையில் 64  நாட்களுக்குப்பிறகு மீண்டும்  மின் உற்பத்தி துவங்கியது.

by Editor / 25-09-2022 07:03:21pm
  1 வதுஅணு உலையில்  64  நாட்களுக்குப்பிறகு  மீண்டும்  மின் உற்பத்தி துவங்கியது.

நெல்லைமாவட்டம் கூடங்குளத்தில்  இந்தியா-ரஷ்யா நாடுகளின் கூட்டு முயற்சியில்  இரு அணு உலைகள் இயக்கப்பட்டு  அவற்றின் மூலம் தலா 1000 மெகாவாட்  மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில்   வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக. கடந்த ஜூலை 24  நள்ளிரவில்   1  வது அணு  உலை நிறுத்தப்பட்டது. இதனால்  2 வது அணு உலை மூலம் 1000 மெகா வாட்  மின் உற்பத்தி செய்யப்பட்டது.

இந்நிலையில் வருடாந்திர பராமரிப்பு பணிகளில் ஈடுப்பட்ட இரு நாட்டு விஞ்ஞானிகளின் விரைவான முயற்சியால்  64 நாட்களுக்கு பின்னர் இன்று   பகல் 12.06 மணி அளவில் 1 வது அணு உலை யில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.

துவக்க நிலையில்  100 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில்படிப்படியாக  மின் உற்பத்தி  1000  மெகாவாட்டாக. உயர்த்தப் படுமென கூடன் குளம் அணு உலை வட்டாரத்தில்  தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே  3 மற்றும் 4 வது அணு உலைகளின்  கான்கீரீட் பணிகள் சுமார் 80 சதவீதம் முடி வடைந்து தற்போது 5 மற்றும் 6 வது அணு உலைகளின் பணிகளும் வேகமாக நடை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags : 5 மற்றும் 6 வது அணு உலைகளின் பணி

Share via