இந்த மேடை இந்தியாவுக்கான புதிய அரசியல் மேடை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Editor / 01-03-2023 10:13:56pm
இந்த மேடை இந்தியாவுக்கான புதிய அரசியல் மேடை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


தமிழகமுதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாளை எனது பிறந்த நாள் பொதுக்கூட்டம் இந்தியாவுக்கான புதிய அரசியல் மேடையாக அமைந்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னையில் நந்தனம்  ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. திமுக வின் பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்க்கே, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், பீகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பேசியதாவது:
நான் தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல, திமுகவே உயிர் என்று எட்டுத்திக்கிலும், திமுகவை காத்து நிற்கும் உங்களின் ஒருவன். வீட்டுக்கு விளக்காக இருப்பேன், நாட்டுக்கு தொண்டனாக இருப்பேன், மக்களுக்காக கவலைப்படும் தலைவனாக இருப்பேன், என் சக்தியை மீறியும் உழைப்பேன்.அண்ணாவை போல் பேச தெரியாது, கலைஞரை போல் எழுதத் தெரியாது, ஆனால் அவர்களைப் போல் உழைக்கத் தெரியும்.

கடமையையும், பொறுப்பையும் என் தோளில் சுமத்தியவர்கள் நீங்கள், அதனை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். சிறைச்சாலையை தவச்சாலையாக மாற்றி வாழ்நாள் முழுவதும் உழைக்க உறுதி எடுத்துக்கொண்டேன்.

எனக்கு 70 வயதாகிவிட்டது என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. என்னுடைய பயணம் நெடிய பயணம். கால நேரம் எதுவும் கிடையாது, மார்ச் 1 அன்று பிறந்த நாள் என சொல்லும்போதுதான் வயது நினைவுக்கு வருகிறது.

இலட்சியவாதிகளுக்கு வயதாவதில்லை. திமுகவை எந்நாளும் ஆட்சியில் வைத்திருப்பேன் கொள்கையை பரப்ப கட்சி, கொள்கையை நிறைவேற்ற ஆட்சி. நம்பர் 1 நன்மைகள் தரக்கூடிய  ஆட்சிக்காலமாக இந்த ஆட்சி அமைய வேண்டும். தேர்தல் அறிக்கையில் வழங்கிய 505 வாக்குறுதிகளில் 85% நிறைவேற்றியுள்ளோம்; எஞ்சிய வாக்குறுதிகள் ஓராண்டில் நிறைவேற்றப்படும்.

எல்லையை தாண்டி அனிவரையும்  ஈர்த்திருக்கிறது திராவிட மாடல் ஆட்சி. எனக்கு சீனியர்களும், ஜூனியர்களும் வாழ்த்துத் தெரிவிக்க வந்திருக்கிறார்கள். எனது பிறந்த நாள் பொதுக்கூட்டம் இந்தியாவுக்கான புதிய அரசியல் மேடையாக அமைந்துள்ளது.

காங்கிரஸ் அல்லாத கூட்டணி கரைசேராது. தேர்தலுக்கு பிறகு கூட்டணி என்பதும் சரிவராது. பாஜகவை எதிர்க்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஓரணியில் நிற்க வேண்டும். காங்கிரஸ் அல்லாத கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும் வாதங்களை நிராகரிக்க வேண்டும்.

ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துவிட்டு ஒரு செங்கல் கூட வைக்காமல் கேவலப்டுத்திக்கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசு. தமிழ்நாட்டை அவமானப்படுத்துகிறார்கள். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தயக்கம் காட்டுகிறார்கள். மகாபாரதத்தில் சூதாட்டம் இருக்கிறது என்பதால் ஒப்புதல் கொடுக்காமல் இருக்கிறார்களா..?

நாம் கொள்கை யுத்தம் தொடுத்துக்கொண்டிருக்கிறோம் நாம். போர் வியூகம் வகுக்கும் பாசறை கூட்டமாக இந்த பிறந்த நாள் கூட்டம் அமைந்துள்ளது. இப்போதே விதைப்போம், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அறுவடைக்காலமாக இருக்கட்டும். களம் நமக்காக காத்திருக்கிறது. நாற்பதும் நமதே, நாடும் நமதே.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 

Tags :

Share via