பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வந்தடைந்தார்

by Staff / 21-04-2022 11:38:35am
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வந்தடைந்தார்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார் 
அகமதாபாத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது 
இரண்டு நாள் பயணமாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவை வந்து சேர்ந்தார் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது .விமான நிலையத்திலிருந்து அவர் தங்கியுள்ள ஓட்டல் வரையிலும் இருபுறமும் மக்கள் கையசைத்து போரிஸ் ஜான்சன் வரவேற்றனர். ஆங்காங்கே கலைஞர்கள் மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட உள்ள போரிஸ் ஜான்சன் தொடர்ந்து இந்தியா முன்னிலை தொழில் நிறுவனம் தலைவர்களை சந்தித்து பேசுகிறார் அப்போது இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டுவரும். வர்த்தகம் புதிய முதலீடு குறித்து விவாதிக்கப்பட உள்ளது குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை இங்கிலாந்து பிரதமருக்கு பாரம்பரிய வரவேற்பு மரியாதை அளிக்கப்படுகிறது. மோடியுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா பிரட் இந்தியா பிரிட்டன் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு அதிகரிப்பது ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள்  இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

 

Tags :

Share via