உக்ரேனுக்கு போர் விமானங்களை அனுப்ப அமெரிக்கா முடிவு

by Staff / 21-04-2022 11:45:30am
உக்ரேனுக்கு  போர் விமானங்களை அனுப்ப அமெரிக்கா முடிவு

ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் உக்ரேனுக்கு  போர் விமானங்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. மேலும் விமானப்படை வலுப்படுத்தும் சீரமைக்க தேவைப்படும் பாகங்களையும் அனுப்ப உள்ளது .கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷ்ய படைகளின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் போர்விமானங்கள் ஆயுதங்கள் தேவை என அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து கனடா ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய ஜோ பைடன் இராணுவ உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளார். இருப்பினும் அமெரிக்க எந்த மாதிரியான விமானங்களை அனுப்புகிறது என்ற தகவல் வெளியாகவில்லை என்றும் சமீபத்தில்  800 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via