இடியுடன் கூடிய கனமழை  வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததால் பரபரப்பு.

by Editor / 01-05-2024 12:06:04am
இடியுடன் கூடிய கனமழை  வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததால் பரபரப்பு.

 தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு 19 ஆம் தேதி நடைபெற்றுமுடிந்தன. இந்த நிலையில் தென்காசி கடையநல்லூர் வாசுதேவநல்லூர்சங்கரன்கோயில்,ராஜபாளையம்,ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்கு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தென்காசி அருகே உள்ள கொடி குறிச்சி யுஎஸ்பி கல்லூரியில் பத்திரமாகவைக்கப்பட்டு  சீல் வைக்கப்பட்டு தினமும் காவலர்கள் முகவர்கள் என அங்கிருந்து வாக்கு இயந்திரங்களை கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாலை திடீரென தென்காசி சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது இந்த மழையால் திடீரென வாக்கு இயந்திரங்கள்  பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ள 92 சிசிடிவி கேமராக்களும் சிறிது நேரம் பழுதானது உடனடியாக வாக்கு இயந்திரங்கள் உள்ள கல்லூரிக்கு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் விரைந்து சென்று உடனடியாக கேமராவை சரி செய்ய உத்தரவிட்டார் இதனை அடுத்து சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கேமரா பழுது பார்க்கும் பணி நடைபெற்றது. பின்னர் அனைத்து பழுதான கேமராக்களும் சரி செய்யப்பட்டு கண்காணிப்பு பணிகள் தொடங்கின இதனால்  பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags : இடியுடன் கூடிய கனமழை  வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததால் பரபரப்பு.

Share via