யார் முதல்வர் இன்று மாலை தொிய வாய்ப்பு....

by Admin / 14-05-2023 04:12:05pm
யார் முதல்வர் இன்று மாலை தொிய வாய்ப்பு....

யார் முதல்வர் இன்று மாலை இதுகுறித்து முடிவெடுப்பதற்காக கர்நாடகாவில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற உள்ளது பார்வையாளரும் இருவர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து 113 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தால் தனி பெரும்பான்மை என்கிற நிலையை எட்டிய காங்கிரஸ் கட்சி முதலமைச்சர் தேர்வில் மும்முரமாக இறங்கி உள்ளது..

சீத்தாராமையாவா?சிவகுமாரா ... இல்லை மல்லிகார்ஜுன கார்கேயா ..என்கிற குழப்பம் கர்நாடக காங்கிரஸ் உள்ளே நிலவிக் கொண்டிருக்கிறது/ மூவர் அல்லாமல் பரமேஸ்வரன் பெயரும்  இதில்  அடிபடுவதால். யாருக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கப் போகிறது என்பதுதான் இப்பொழுது கர்நாடகத்தில் எழுந்துள்ள மிகப்பெரிய ஒரு கேள்வி.

ஏற்கனவே, முதலமைச்சராக இருந்த சீத்தாராமையா அவருக்கு கொடுக்கப் போகிறார்களா இல்லை கர்நாடகா கட்சியை வளர்த்தெடுத்து இந்த வெற்றியை பெறப் போராடிய கட்சியினரை வழிநடத்திய டி கே சிவகுமாருக்கு வழங்க போகிறார்களா என்பது தான்..

கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர்  டி கே  சிவகுமார்  தனக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை   அந்த பதவியைவேறு யாரும் பெறக்கூடாது  என்கிற எண்ணத்தில் மல்லிகார்ஜுன கார்க்கையை முன்னிறுத்துவதாக தெரிகிறது. ஆக .காங்கிரஸ் தன்னை கர்நாடகத்தில் நிலை நிறுத்துவதற்கு ராகுல் காந்தியின் யாத்திரை ஒரு காரணமாக அமைந்ததும் சோனியா காந்தி ராகுல் காந்தி பிரியங்கா காந்தியின் தொடர் பிரச்சாரமும் அவர்கள் முன்வைத்த தேர்தல் அறிக்கை குறித்த வாக்குறுதிகளும் காரணமாக இருந்தது. சிவகுமாா் தான்.அதனால் சிவகுமாா் தான் முதல்வராக வேண்டும் என்று ஆதரவாளா்கள் சுவரொட்டி வழியாக கோாி்க்கை வைத்து வருகின்றனா்.

 

Tags :

Share via