ஜெயலலிதா தோழி வி. கே. சசிகலா

by Editor / 17-08-2021 06:39:09pm
ஜெயலலிதா தோழி வி. கே. சசிகலா

 

வி. கே. சசிகலா (பிறப்பு: 18 ஆக.1954) என்பவர் ஓர் தமிழக அரசியல்வாதியும், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும் ஆவார்.இவர் அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் உயிர்த்தோழியாக இருந்தார்.

2016இல் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் இவர் அதிமுகவின் பொதுச்செயலாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறிது காலம் அப்பதவியில் இருந்தார்.2017ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடி பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டார்.சசிகலா நடராசன் என்று தொடக்கத்தில் அறியப்பட்டவர். அரசியல் நுழைவுக்குப் பின்பு வி. கே. சசிகலா என்றும், அதிமுக ஆதரவாளர்களால் சின்னம்மா என்றும் அழைக்கப்படுகிறார்.


ஜெயலலிதாவுடன் இணைந்து வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தண்டனையைப் பெற்றார். பிறகு மேல்முறையீடு செய்து விடுதலையானார். ஆனால் மீண்டும் 2017 ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் சசிகலா குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது இதனால் சசிகலா கட்சியை வழிநடத்தத் தன் அக்கா மகன் டிடிவி தினகரனை அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக நியமித்தார்.1954 ஆம் ஆண்டு ஆகத்து 18 ஆம் தேதி திருத்துறைப்பூண்டியில் விவேகானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதிக்கு ஐந்தாவது குழந்தையாக சசிகலா பிறந்தார். இவரின் தாத்தா சந்திரசேகர் அவ்வூரில் மருந்துக்கடை நடத்திவந்தார். அவரது மறைவுக்கு பின் அவரின் மகன் விவேகானந்தன் அக்கடையை கவனித்துக்கொண்டார்.


பாரத ஸ்டேட் வங்கியில் பணியில் இருந்த சசிகலாவின் மூத்த அண்ணன் சுந்தரவதனம் 1950இன் இறுதியில் மன்னார்குடிக்கு மாற்றலாகி வந்ததால் விவேகானந்தனின் குடும்பத்தினர் மன்னார்குடிக்கு குடிபெயர்ந்தார்கள்.


சசிகலா 1973இல் மக்கள் தொடர்பாளர் என்ற அரசுப்பதவியில் இருந்தவரும் திமுக கட்சியைச் சேர்ந்தவருமான நடராசன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்தைத் திமுக தலைவர் மு. கருணாநிதி நடத்திவைத்தார்.நெருக்கடி நிலை காலகட்டத்தில் நடராசன் தன் பதவியை இழந்தார். பிறகு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அப்பதவியை மீண்டும் பெற்றார்.


பிறகு சசிகலா போயஸ் கார்டன் பகுதிக்கு அருகே வினோத் வீடியோ விசன் என்ற ஒளிநாடாவை வாடகைக்கு விடும் கடையை நடத்தினார். அப்போது ஜெயலலிதாவுடன் நட்பு ஏற்பட்டது.


1987இல் எம். ஜி. ஆர் மறைவுக்கு பின்னர், செயலலிதா மற்றும் ஜானகி என இரு அணிகளாக பிரிந்து அதிமுக தேர்தலை சந்தித்த நேரத்தில், ஜெயலலிதா பல அரசியல் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது எல்லாம் ஜெயலலிதாவுடன் இருந்தவர் சசிகலா. செயலலிதா சட்டமன்றத்துக்குள் சென்றபோது, பல நெருக்கடிக்குள்ளானார். சட்டப்பேரவையிலேயே தாக்கப்பட்டார். இதனால் ஒரு கட்டத்தில் அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார் செயலலிதா. இந்த நெருக்கடியான கால கட்டங்கள் அனைத்திலும் செயலலிதாவுக்கு ஆறுதலாக இருந்தா சசிகலா. அதன்பின்னர் செயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டனிலேயே தங்க ஆரம்பித்தார்.1991-க்குப் பிறகு அ.தி.மு.க. சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் வேட்பாளர் தேர்வில் சசிகலா முக்கிய பங்கு வகித்தார். அ.தி.மு.க-வில் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். 


செயலலிதா உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது அவருடன் இருந்தவர் சசிகலா. பிறகு செயலலிதா மறைந்தபிறகு அவருடைய இறுதிச்சடங்குகளையும் சசிகலாவே முன்னின்று செய்தார்.அதிமுக பொதுச் செயலாளராக நியமனம்அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வழி நடத்த, அஇஅதிமுக பொதுச் செயலாளர் நியமனத்துக்கு கட்சி பொதுக்குழு ஒப்புதல் அளித்தது.

அதன்படி 2016 திசம்பர் 31 ஆம் தேதி அவர் அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டார்.
பிப்ரவரி 5, 2017 அன்று அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக (முதலமைச்சர்) தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு காரணமாக அவர் அப்பதவியை இழக்க நேரிட்டது.03 மார்ச் 2021 அன்று தான் அரசியலை விட்டே ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்டார்

 

Tags :

Share via