மின்சார பற்றாக்குறையை சமாளிக்க 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.

by Staff / 18-04-2022 04:41:24pm
மின்சார பற்றாக்குறையை சமாளிக்க 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் மின் பயன்பாடு அதிகரித்துள்ளது என்ற மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிலக்கரி பற்றாக்குறையை சமாளிக்க 4 லட்சத்து 7 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் எழுத அவர் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் மொத்த மின்தேவை 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவாக இருந்ததாகவும் தற்போது உச்சபட்சமாக 17 ஆயிரத்து 596 மெகாவாட் என்ற அளவில் மின் தேவை அதிகரித்துள்ளது எனவும் கூறினார். கோடைகாலத்தில் 2500 மெகாவாட் வரை மின் பற்றாக்குறை இருக்கும் என கணக்கிட்டு செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை சமாளிக்க நடுத்தர கால கொள்முதல் மூலம் ஏப்ரல் மே மாதங்களில் தலா 3,000 மெகாவாட் மின்சாரம்  கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது  என  அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via